Enable Javscript for better performance
பணம் இல்லை என்று கூறியதால் வங்கியை சூறையாடிய வாடிக்கையாளர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    பணம் இல்லை என்று கூறியதால் வங்கியை சூறையாடிய வாடிக்கையாளர்கள்!

    By DIN  |   Published on : 28th November 2016 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SBI

     

    இம்பால்: தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க வங்கி கிளையில் போதிய பணம் கையிருப்பு இல்லை என்ற காரணத்தால், வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.  

    மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. அந்த  கிளையில் இன்று காலை வாடிக்கையாளர்கள் இருவர் தங்களது வங்கிக்கணக்கிலிருந்து, ஒருவாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவான ரூ.24 ஆயிரத்தை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லை; போதிய பணமுமில்லை என்று வங்கி ஊழியர்கள் கூறியதால் அங்கே கைகலப்பு மூண்டது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். 

    இதே போல் மேற்கு இம்பாலில் உள்ள, லெமாக்ஹோங்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உருவான தகராறில் வங்கியின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai