Enable Javscript for better performance
பிகார் வர்த்தகரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பிகார் மாநிலத்தில் உள்ள ககரியா ரயில் நிலையத்தில், பீடா வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கத்தை ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    இதுகுறித்து ரயில்வே போலீஸார் தெரிவித்ததாவது:
    பீடா வியாபாரியான கன்ஷியாம் பகத் என்பவர், ரூ.10 லட்சம் ரொக்கத்தை ராஜ்ராணி விரைவு ரயில் மூலம் பாட்னாவுக்குக் கொண்டு செல்வதாக ரயில்வே போலீஸார் தகவல் கிடைத்தது.
    அதைத் தொடர்ந்து, கன்ஷியாமிடம் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரிடம், ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2,000 நோட்டுகளும், ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளும் இருந்தன. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாட்னாவில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு இந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
    அதையடுத்து, அந்தப் பணம் குறித்து வருமான வரித் துறைக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர். இந்தப் பணம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai