Enable Javscript for better performance
மகாராஷ்டிரம்: நகராட்சி தேர்தலில் 70 % வாக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 147 நகராட்சிகளுக்கும், 17 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் எதிர்த்துவரும் நிலையில், மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு இந்தத் தேர்தல் மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு கருதுகிறது.
    உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்வது இதுவே முதல்முறையாகும்.
    இதுகுறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரி ஜே.எஸ்.ஜகாரியா, மும்பையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியது' என்றார்.
    இத்தேர்தலில் பாஜக-சிவசேனை கட்சிகளின் முந்தைய கூட்டணியே தொடர்ந்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து முறையான அறிவுப்பு எதுவும் வெளியிடவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai