Enable Javscript for better performance
மலப்புரம் என்கவுன்ட்டர் விவகாரம்: இறந்த மாவோயிஸ்ட்டுகள் உடலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு!- Dinamani

சுடச்சுட

    

    மலப்புரம் என்கவுன்ட்டர் விவகாரம்: இறந்த மாவோயிஸ்ட்டுகள் உடலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு!

    By IANS  |   Published on : 28th November 2016 03:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    maoist_encounter

     

    மஞ்சேரி: மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின்  உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு மஞ்சேரியில் உள்ள நீதிமன்றம் ஒன்று காவலதுறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் காட்டுப்பகுதியில்,கடந்த வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினருடன் நடந்த மோதலில், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வழக்கமான சோதனையின் போது , மாவோயிஸ்ட்டுகளை கண்டறிந்தததாகவும், அவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கியதும்தான் வேறுவழியின்றி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதனை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்கவில்லை,. இது காவல்துறையினர் நடத்திய போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டின. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை இன்று  விசாரித்த நீதிமன்றம் நாளை  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாகவும், அதுவரை இரண்டு உடல்களையும் பாதுகாத்து வைக்குமாறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.உடல்கள் இரண்டும் தற்போது கோழிக்கோடு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai