Enable Javscript for better performance
மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்: நீதிபதி விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்: நீதிபதி விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 28th November 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த அந்த மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு உத்தரவிட்டது.
    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 24-ஆம் தேதி நடைபெறுவதாக அந்த மாநில உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேரள மாநில அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர்.
    அப்போது, மாவோயிஸ்டுகள் அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில், மாவோயிஸ்டுகள் குப்பு தேவராஜ் (65), அஜிதா (45) ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் காயமடைந்த மாவோயிஸ்டுகள் 8 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
    சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள், பென் டிரைவ், சார்ஜர், மோடம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    எனினும், இந்த என்கவுன்ட்டருக்கு மாநிலத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் உள்ள முக்கியக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai