Enable Javscript for better performance
யார் இந்த ஹர்மீந்தர் மின்டூ; எதற்காக கைதானவர்?- Dinamani

சுடச்சுட

    


    புது தில்லி: பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ 24 மணி நேரத்துக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை சீருடையில் வந்த 10 பேர் நபா சிறைச் சாலையை தகர்த்து, ஹர்மீந்தர் மின்டூ உட்பட 6 சிறைக் கைதிகளை தப்பிக்க வைத்தனர்.

    இவர்களில் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ஹர்மீந்தர் மின்டூவை காவல்துறையினர் தில்லியில் கைது செய்துள்ளனர்.

    இன்று கைது செய்யப்பட்டுள்ள ஹர்மீந்தர் மின்டூ மீது, "தேரா சச்சா சௌதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமை தாக்கியது, ஹல்வாரா விமானப் படைத் தளத்தில் வெடிபொருள்களுடன் பிடிபட்டது உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை, பஞ்சாப் மாநில போலீஸார், தில்லி விமான நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

    பாதுகாப்பு அதிகரிப்பு: சிறையில் இருந்து கைதிகள் தப்பியதை அடுத்து, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வெளிமாநில பயணிகள் வந்து செல்லும் பேருந்து முனையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா? அல்லது பாதுகாப்புக் குறைபாடு உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று நாள்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

    ரூ.25 லட்சம் அறிவிப்பு: தப்பியோடிய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai