Enable Javscript for better performance
ரூ. 1.37 கோடி பணமிருந்த வாகனத்துடன் மாயமான விவகாரம்: வாகன ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 1.37 கோடி பணமிருந்த வாகனத்துடன் மாயமான விவகாரம்: வாகன ஓட்டுநர் கைது

    By DIN  |   Published on : 30th November 2016 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரில் ரூ. 1.37 கோடி பணமிருந்த வாகனத்துடன் மாயமான வழக்கில் வாகன ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
    பெங்களூரில் உள்ள லிங்கராஜபுரத்தைச் சேர்ந்த டோமினிக் என்பவர், வங்கிகளுக்குப் பணம் கொண்டு செல்லும் வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
    இவர் கடந்த 23-ஆம் தேதி மதியம் ரூ.1.37 கோடி ரொக்கப் பணம் வைத்திருந்த வாகனத்துடன் தலைமறைவானார். பின்னர், அந்த வாகனத்தை மெளன்ட் கார்மல் கல்லூரி வளாகத்தின் அருகே நிறுத்திவிட்டு, ரூ.92 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு டோமினிக், தனது மனைவி எவிலின், மகனுடன் பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு தப்பினார்.
    அதையடுத்து, அவரைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. கேரளத்திலிருந்து பெங்களூருக்கு திரும்பி வந்த டோமினிக்கின் மனைவி எவிலினை ஞாயிற்றுகிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.79 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
    அதைத் தொடர்ந்து, பெங்களூரில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த டோமினிக், திங்கள்கிழமை நள்ளிரவு தனது நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றபோது அவரை போலீஸார் மடக்
    கிப் பிடித்து, கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai