Enable Javscript for better performance
ஒடிஸா: கடலோரச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.76.5 கோடி மத்திய அரசு நிதி உதவி- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா: கடலோரச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.76.5 கோடி மத்திய அரசு நிதி உதவி

    By DIN  |   Published on : 08th October 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடிஸாவின் கடலோரச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.76.5 கோடி அளிக்கவிருக்கிறது.
    கோபால்பூர், தாம்பரா, பாரகுல், சதபடா ஆகிய கடற்கரைகள் இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும். இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.15.3 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது என்று மாநில சுற்றுலா அமைச்சர் அசோக் சந்திர பாண்டா புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
    இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் கடற்கரை அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் தரப்படும். சுமார் 480 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை மாநிலம் கொண்டிருப்பதால் இத்திட்டத்தில் ஒடிஸா சேர்க்கப்பட்டிருக்கிறது.
    மேற்குறிப்பிட்ட கடற்கரை இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்தக் கோரும் ஒடிஸாவின் யோசனையை மத்திய அரசு அண்மையில்தான் பரிசீலித்தது. இருப்பினும் இதுவரை எத்திட்டத்துக்கும் அனுமதி தரப்படவில்லை. கடற்கரை சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளில் சாலைகள், நீர் விளையாட்டுகள், படகு நிறுத்துமிடும், தண்ணீர்ப் பூங்கா, சூரிய மின் சக்தியிலான தெரு விளக்குகள், மிதக்கும் உணவு விடுதிகள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்படும். மேலும் அனைத்து இடங்களிலும் சுற்றுலா வரவேற்பு மையங்கள் திறக்கப்படும். இது தவிர, கோபால்பூரில் மணல் சிற்பம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கிறது என்று அமைச்சர் பாண்டா கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai