Enable Javscript for better performance
கோவாவுக்கு பொதுக் கழிப்பிடங்களை மத்திய அரசு வழங்கும்- Dinamani

சுடச்சுட

    

    கோவாவுக்கு பொதுக் கழிப்பிடங்களை மத்திய அரசு வழங்கும்

    By DIN  |   Published on : 08th October 2016 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkiah-naidu

    "தூய்மை இந்தியா' இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்துக்குத் தேவையான பொதுக் கழிப்பிடங்களையும் வீட்டுக் கழிப்பிடங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
    கோவா மாநிலத்தில் "தூய்மை இந்தியா' இயக்கத்தின் அமலாக்கம் தொடர்பாக, பனாஜியில் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்துக்குத் தேவையான பொதுக் கழிப்பிடங்களையும் வீட்டுக் கழிப்பிடங்களையும் மத்திய அரசு வழங்கும்.
    பனாஜி நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், கோவாவில் வீட்டுவசதித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகருடன் விவாதித்தேன். வீட்டுவசதித் திட்டங்களுக்கு மாநில அரசு தேவையான இடம் ஒதுக்கினால், அந்தத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆதரவளிக்கும்.
    சர்வதேச சுற்றுலாத் தலமாக கோவா விளங்குவதாலும், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பனாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளதாலும் இந்த நகரை மேலும் விரிவாக்குவது தொடர்பான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்றார் வெங்கய்ய நாயுடு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai