Enable Javscript for better performance
சர்வதேச பயங்கரவாதமே பாகிஸ்தானின் அடையாளம்: அருண் ஜேட்லி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச பயங்கரவாதமே பாகிஸ்தானின் அடையாளம்: அருண் ஜேட்லி

    By DIN  |   Published on : 08th October 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ArunJetley

    சர்வதேச பயங்கரவாதமே பாகிஸ்தானின் அடையாளமாக விளங்குவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
    உலக அளவில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலும் அங்கு பாகிஸ்தானின் ரேகைகள் இருப்பதாகவும் ஜேட்லி கூறினார்.
    மத்திய சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியில் நடைபெறும் வெவ்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு அருண் ஜேட்லி சென்றுள்ளார். அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
    தெற்காசிய பிராந்தியம் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. அத்தகைய பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதில் பாகிஸ்தான் முக்கியப் பங்காற்றி வருகிறது.
    உலகின் எந்த மூலையில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றாலும் அங்கு பாகிஸ்தானின் ரேகைகள் இருக்கின்றன. இதன் காரணமாக, சர்வதேச பயங்கரவாதம் என்பதே பாகிஸ்தானின் அடையாளமாக மாறிவிட்டது. பயங்கரவாதத்தை ஒரு கொள்கையாகவே கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
    இதனால், உலக அளவில் பாகிஸ்தான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த 19-ஆவது சார்க் மாநாட்டை பல நாடுகள் புறக்கணித்ததே இதற்கு நல்ல உதாரணம். பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, இம்மாநாட்டில் பங்கேற்ற அந்த நாடுகள் விரும்பவில்லை. இதனால் அம்மாநாடே ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, தாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக பாகிஸ்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால், அதன் பேச்சை நம்ப எந்த நாடும் தயாராக இல்லை.
    இந்தியா மீது பாகிஸ்தான் மேற்கொண்ட தொடர் தாக்குதல்கள் காரணமாகவே அந்நாட்டில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையானது இந்தியச் செலாவணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தேசப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இது, பிரச்னையை முடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர பெரிதாக்குவதற்காக அல்ல என்றார் அருண் ஜேட்லி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai