Enable Javscript for better performance
பாக். ராணுவம் 25 முறை அத்துமீறித் தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்ததை அடுத்து, எல்லையையொட்டிய பகுதிகளில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள், குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 25 முறைக்கும் மேல் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ராணுவ வீரர்கள் 19 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
    இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ரஜௌரி, பூஞ்ச், ஜம்மு மாவட்டங்களில் எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் இருக்கும் பாதுகாப்பு நிலைகள், குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது.
    இதன்காரணமாக, எல்லையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai