Enable Javscript for better performance
மரபணு மாற்ற கடுகுப் பயிரை வர்த்தக ரீதியில் வெளியிடத் தடை: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    மரபணு மாற்ற கடுகுப் பயிரை வர்த்தக ரீதியில் வெளியிடத் தடை: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரபணு மாற்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடுகுப் பயிரை வரும் 17-ஆம் தேதி வரை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அருணா ரோட்ரிக்ஸ் என்பவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வழக்குத் தொடுத்துள்ளார்.
    இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கை விரிவாக விசாரிக்க இருக்கிறோம். எனவே, மரபணு மாற்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடுகுப் பயிரை வர்த்தக அடிப்படையில் வெளியிட 10 நாள்களுக்கு தடை விதிக்கிறோம். இதுபோன்ற பயிர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, பொது மக்களின் கருத்துகளை மத்திய
    அரசு அறிய வேண்டும்' என்றனர்.
    அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துல்சர் மேத்தா ஆஜராகி வாதாடியபோது, வரும் 17-ஆம் தேதி வரையிலும் அந்தப் பயிர் வர்த்தக ரீதியில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். மேலும், அந்தப் பயிர் தொடர்பாக பொது மக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மத்திய அரசு கேட்டறியும் என்றும், பயிரை வெளியிடுவதற்கு முன்பு, அதுகுறித்த கருத்துகளை மதிப்பீட்டுக் குழுவின் பார்வைக்கு மத்திய அரசு முன்வைக்கும் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai