Enable Javscript for better performance
ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை ஆதரிக்க மாட்டோம்: ராகுல் காந்தி- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை ஆதரிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

    By DIN  |   Published on : 08th October 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rahul

    ராணுவ நடவடிக்கையை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இந்திய ராணுவ நடவடிக்கை தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல்களுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். ஆனால், பாஜகவின் சுவரொட்டிகள், அக்கட்சியின் பிரசாரம் ஆகியவற்றுக்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்துவதை ஆதரிக்க மாட்டோம்' என்றார்.
    கேஜரிவால் கண்டனம்: முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து வியாழக்கிழமை பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியை தரகர் என்று பொருள்படும் "தலாலி' என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    இதுபோன்ற வார்த்தையை ராகுல் பயன்படுத்துவதை கண்டிக்கிறேன். எல்லையில் பதற்றம் நிலவும்நிலையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த நாடும் ராணுவத்தையும், பிரதமரையும் ஆதரிக்க வேண்டும். இதை யாரும் அரசியலாக்கக் கூடாது என்றார் கேஜரிவால்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai