Enable Javscript for better performance
வெற்றுச் சவடால்: காங்கிரஸ் தாக்கு- Dinamani

சுடச்சுட

    
    congress

    பாகிஸ்தான் எல்லையை வரும் 2018-ஆம் ஆண்டு இறுதிக்குள் மூடுவதற்கு முடிவு செய்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருப்பது, "வெற்றுச் சவடால்' என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் அமரீந்தர் சிங், இதுதொடர்பாக,வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்கெனவே இரண்டு அடுக்கு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேலிகளுக்கு இடையில் மின்னொளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், பாகிஸ்தான் எல்லையை மூடுவதற்கு முடிவு செய்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறுவது வெற்றுப் பேச்சாகும்.
    வெவ்வேறு நில அமைப்புகளைக் கொண்ட எல்லைப் பகுதியின் புவியியல், நிலவியல் அமைப்பைக் கணக்கில் கொள்ளாமல் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது, தேச பாதுகாப்பு விவகாரங்களில் அவர் அலட்சியம் காட்டுவதையே பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநில எல்லையைப் பொருத்தவரை ஊடுருவல், ஆக்கிரமிப்பு செய்ய முடியாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், எல்லையை மூடுவது என்று ராஜ்நாத் சிங் கூறுவதை புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது. ஒருவேளை, பஞ்சாப் எல்லையில் காங்கிரீட் சுவர் எழுப்ப வேண்டும் என அவர் விரும்புகிறாரா? இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே எழுப்பப்பட வேண்டியது சுவர் அல்ல, இணைப்புப் பாலங்களே. அமைதி நடவடிக்கைக்காக, ஜெர்மனியின் பெர்லின் நகரில் எழுப்பப்பட்டிருந்த சுவர் கூட இடிக்கப்படும் நிலை ஏற்பட்டது. மொத்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பிற்போக்குக் கொள்கைகள், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பின்னடவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று அந்த அறிக்கையில் அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai