Enable Javscript for better performance
ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கும் உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை வரும் 17-ஆம் தேதி வரையிலும் உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
    இதுதொடர்பாக ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடுகையில், "இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான முடிவை அறக்கட்டளை எடுக்கும்' என்று வாக்குறுதி அளித்தார்.
    இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "மும்பை உயர் நீதிமன்றம் தனது உத்தரவை செயல்படுத்துவதற்கு பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை வரும் 17-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கிறோம்' என்றனர். மேலும், அந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையையும் 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதித்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.
    எனினும், உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தனது உத்தரவை செயல்படுத்துவதற்கு 6 வார இடைக்காலத் தடையை மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
    இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai