Enable Javscript for better performance
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு

    By DIN  |   Published on : 15th October 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக ஏழை மக்களால் எவ்வாறு தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஸா, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    சர்க்கரை, கடலை மாவு உள்பட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அவற்றின் விலை உயர்ந்தபடியேதான் இருக்கிறது.
    கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததைக் காட்டிலும், நிகழ் நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் தொழில் துறை வளர்ச்சி படு பாதாளத்துக்குச் சென்று விட்டது என்று ஷோபா ஓஸா தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai