Enable Javscript for better performance
அரவிந்த் கேஜ்ரிவால் பாகிஸ்தானின் கதாநாயகன்: போஸ்டர்| Gujarat: Kejriwal's poster with terrorist- Dinamani

சுடச்சுட

    

    அரவிந்த் கேஜ்ரிவால் பாகிஸ்தானின் கதாநாயகன்: போஸ்டரால் பரபரப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hero_kejriwal


    அகமதாபாத்: குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் கதாநாயகன்கள் என்ற தலைப்பில் பயங்கரவாதிகளுடன் கேஜ்ரிவால் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்துக்கு வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் கதாநாயகன் என்று கூறி, புர்ஹான் வானி, அரவிந்த் கேஜ்ரிவால், ஒசாமா பின்லேடன், ஹபீஸ் சயீத் ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையாக இடம்பெற்ற போஸ்டர், குஜராத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு ஆதாரங்களைக் காட்டுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியதை அடுத்து, அவருக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai