Enable Javscript for better performance
இந்திய ராணுவம் பேசுவதில்லை, வீரத்தை செயலில் காட்டும்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    இந்திய ராணுவம் பேசுவதில்லை, வீரத்தை செயலில் காட்டும்: பிரதமர் மோடி

    By DIN  |   Published on : 15th October 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் போர் வீரர்கள் நினைவிடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், பாதுகாப்புத் துற

    நமது ராணுவம் பேசிக்கொண்டிருக்காது, தனது வலிமையை செயலில் காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உருவாக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். நாட்டின் வளர்ச்சியில் ராணுவ வீரர்களின் பங்களிப்பையும், அவர்களின் தியாகத்தையும் அவர் பாராட்டிப் பேசினார். மோடி மேலும் பேசியதாவது:
    நாம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது, நமது ராணுவம் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது பிரச்னை ஏதுமில்லை. ஆனால், நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தால், ராணுவம் நம்மை மன்னிக்காது. அது ராணுவத்துக்க நாம் இழைக்கும் அநீதியாகும். இடையறாத கண்காணிப்பே சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் விலையாகும். எனவே, எப்போதும் நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
    நமது ராணுவம் பேசுவதில்லை, அது தனது வீரத்தை செயலில் காட்டுகிறது. இதற்கு முன்பு இதை நான் கூறியபோது, எனக்கு எதிரான விமர்சனங்கள் குவியும். நமது ராணுவத்தைப் போலவே, நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பேசுவதற்குப் பதிலாகச் செயல்படுகிறார். பல நூறு ஆண்டுகால இந்திய வரலாற்றில், நமது முன்னோர் யாரும் நாடு பிடிப்பதற்காக, பிற நாட்டுடன் போரிட்டதில்லை. அதேநேரத்தில், நமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய தருணம் வந்தபோது இந்தியா காத்திருந்தது கிடையாது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது நமது ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
    இதற்கு முன்பு, அந்தப் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கச் சென்றபோது தங்கள் மீது கற்களை வீசித் தாக்கியவர்கள்தான் இவர்கள் என்று ராணுவத்தினர் அப்போது நினைக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பலரைக் காப்பாற்றிய ராணுவத்தினரை பாராட்டுகிறேன்.
    இதேபோல், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, நமது ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவை மட்டுமின்றி, போர்ப் பதற்றம் நீடிக்கும் ஏமனில் இருந்து 5,000 இந்தியர்களையும், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டு வந்தவர்கள் நமது ராணுவ வீரர்கள்.
    சர்வதேச அமைதிக்காப்புப் படையிலும், நீண்ட காலமாக இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
    முன்னாள் ராணுவ வீரர்களுக்கான "ஒரே தகுதி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது பாஜக கூட்டணி அரசுதான். இந்தத் திட்டத்துக்காக, இதுவரை ரூ.5,000 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.
    ஆனால், சில அரசுகள் புத்திசாலித்தனமாக நிதி நிலை அறிக்கையில் ரூ.500 கோடியை மட்டும் அறிவித்துவிட்டு, அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவிடும். (முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்).
    இந்தப் போர் வீரர்கள் நினைவிடம், ஒரு புனிதத் தலத்தைப் போன்றது என்று மோடி கூறினார்.


     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai