Enable Javscript for better performance
உத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

    By DIN  |   Published on : 15th October 2016 04:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varanasi

    வாராணசி: உத்தரப் பிரதேசம், வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

    பாபா ஜெய் குருதேவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற போது ராஜ்கட் பாலம் அருகே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai