Enable Javscript for better performance
உத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

    By DIN  |   Published on : 15th October 2016 04:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாராணசி: உத்தரப் பிரதேசம், வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

    பாபா ஜெய் குருதேவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற போது ராஜ்கட் பாலம் அருகே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியான செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai