Enable Javscript for better performance
காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி; 8 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி; 8 பேர் காயம்

    By DIN  |   Published on : 15th October 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் எஸ்எஸ்பி எனப்படும் துணை ராணுவப் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.
    இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    ஸ்ரீநகர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவிட்டு தங்கள் முகாமுக்கு வேனில் ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.
    ஸகுரா எனும் பகுதி அருகே வேன் வந்தபோது, அதன்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
    இந்தத் தாக்குதலில் வேனுக்குள் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு காவலர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்து, தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai