Enable Javscript for better performance
காஷ்மீர் பிரச்னை: இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் பிரச்னை: இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தின. அதன் பிறகு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    காஷ்மீர் பள்ளத்தாக்கின் தற்போதைய நிலவரம், மிகவும் அபாயகரமானதாக உள்ளது. எனவே காஷ்மீர் பிரச்னை குறித்து அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்.
    காஷ்மீர் பிரச்னைக்கு எவ்வளவு விரைவில் தீர்வு காணப்படுகிறதோ, அது நமது நாட்டுக்கு மட்டுமன்றி, தெற்காசியா முழுமைக்கும் நன்மை பயக்கும். காஷ்மீர் பிரச்னை என்பது அரசியல் ரீதியிலானது.
    இதற்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று பிரதமரும் குறிப்பிட்டுள்ளார்.
    ஹுரியத் மாநாடு அமைப்பு உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாநிலத்தை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், அரசியல் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும். பெல்லட் ரக துப்பாக்கிச் சூட்டில் நேரிட்ட உயிரிழப்புகள், கண் பார்வை பறிபோன சம்பவம் குறித்து விசாரிக்கவும், அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறியவும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்.
    காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் அமர்ந்து பேச வேண்டும்.
    இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். போரினால் ஒருபோதும் தீர்வு காண முடியாது.
    காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால், பயங்கரவாதம் தானாக அழிந்துவிடும்.
    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி கடந்த 2002-ஆம் ஆண்டு காஷ்மீர் தொடர்பாக பேசியபோது, நண்பர்கள் மாறலாம்; ஆனால் நமது அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்று குறிப்
    பிட்டார்.
    அண்டை நாடுகளுடன் நாம் அமைதியை கடைப்பிடித்தால், நமது நாடு வளர்ச்சியடையும். அதேநேரத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்தோம் எனில், அவர்களின் வளர்ச்சியில் தடை ஏற்படும். நமது வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்றார் ஃபரூக் அப்துல்லா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai