Enable Javscript for better performance
குளத்துக்குள் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    
    bus

    மத்தியப் பிரதேச மாநிலம், ராத்லம் பகுதியில் குளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.

    மத்தியப் பிரதேசத்தில் குளத்துக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
    மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் நகரிலிருந்து ஜாவ்ரா கிராமம் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
    நாம்லி பகுதி அருகே வந்தபோது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குளத்துக்குள் கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயங்களுடன் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    குளத்திலிருந்து இறந்த நிலையில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் நிலைமை தெரியவில்லை. அவர்களை போபாலில் இருந்து வந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், இந்தூரில் இருந்து வந்த நீச்சல் வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    பிரதமர் இரங்கல்: இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:
    ரத்லாம் பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏராளமனோர் உயிரிழந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கûலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai