Enable Javscript for better performance
நரசிம்ம ராவ் ஓர் உண்மையான சீர்திருத்தவாதி- Dinamani

சுடச்சுட

    
    rangarajganC

    முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஓர் உண்மையான சீர்திருத்தவாதி என்றும், நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு அவரது சீர்திருத்தங்கள் உதவியதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தவருமான சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
    முன்னாள் பத்திரிகையாளர் சஞ்சய் பாரு எழுதிய "1991: பி.வி.நரசிம்ம ராவ் வரலாறு படைத்தது எப்படி?' என்ற புத்தகம், ஹைதராபாதில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த விழாவில், சி.ரங்கராஜன் பேசியதாவது:
    பொருளாதாரச் சீர்திருத்தங்களை வகுப்பதில் நரசிம்மராவ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் முக்கியப் பங்காற்றினார். எனினும், அவரது முயற்சிகளுக்கான அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை.
    ஆனால், நரசிம்மராவ் ஒரு சீர்திருத்தவாதி என்பது உண்மை. அப்போது நான் திட்ட கமிஷனின் உறுப்பினராக இருந்ததால், சீர்திருத்தங்களின் பின்னணியில் முழுக்கவே அவர்தான் இருந்தார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். பல்வேறு காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அப்போது நடப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமாறு செய்தார்.
    பொருளாதாரத்தில் இருந்த கட்டுப்பாடுகளை அப்போது ஒழித்தோம். உரிமங்கள் வழங்குவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், அந்தச் செய்திகள் உரிய வகையில் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே, நரசிம்மராவுக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்காமல் போய்விட்டது.
    அந்த நேரத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வர மன்மோகன் சிங்குக்கு நரசிம்ம ராவ் முழு ஆதரவாக இருந்தார் என்றார் ரங்கராஜன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai