Enable Javscript for better performance
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: ரஷ்யாவுக்கு பாராட்டுத் தெரிவித்த மோடி- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: ரஷ்யாவுக்கு பாராட்டுத் தெரிவித்த மோடி

    By DIN  |   Published on : 15th October 2016 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi


    பனாஜி: பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யாவுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    கோவாவில் இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    அப்போது, இந்தியா - ரஷ்யா இடையே மிகச் சிறந்த நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தொழில்துறைகள் இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது.

    ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இரு நாடுகளும் பயணிக்கின்றன.  தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யாவுக்கு பாராட்டுக்கள் என்று மோடி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரு நாடுகளின் தொழில் நிறுவனங்கள், ராணுவம், தொழில்நுட்ப இணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai