Enable Javscript for better performance
பாஜகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ்

    By DIN  |   Published on : 15th October 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் நஸீமுதீன் சித்திக், லக்னெளவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக, சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை. சமாஜவாதியிடம் அதிருப்தி அடைந்துள்ள முஸ்லிம்கள், பகுஜன் சமாஜ் கட்சியில் பெருமளவில் இணைகின்றனர். அவர்களைத் திசைதிருப்புவதும், பாஜகவுக்கு உதவுவதும்தான் அவர்களின் நோக்கமாகும்.
    பாஜகவும் சமாஜவாதியும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நலன்களில் அக்கறை செலுத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி வலுவடையும் போதெல்லாம், பாஜகவும் வலுவடைகிறது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி வலுவடைந்தால், மாநிலத்தில் பாஜக வலுவிழக்கும்.
    ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றால்தான் முலாயம் சிங் யாதவ் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவுடன் சமாஜவாதி ரகசிய உடன்படிக்கையில் உள்ளது.
    பாஜக ஆதரவுடன் பகுஜன் சமாஜ் கட்சி மூன்று முறை ஆட்சியமைத்தபோதும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதிகாரம் செலுத்தியபோது, மாயாவதி தனது பதவியைத் துறந்தார் என்றார் நஸீமுதீன் சித்திக்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai