Enable Javscript for better performance
பொது சிவில் சட்டம்: காங்கிரஸ் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    "அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தாத வரையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது' என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மேற்கண்ட கருத்தை அக்கட்சி தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஜா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    பொது சிவில் சட்ட விவகாரத்தில், சட்டமேதை அம்பேத்கரின் கருத்துக்களையே காங்கிரஸ் எதிரொலிக்கிறது. அதாவது, பொது சிவில் சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்; அது நிகழாத வரையில், அச்சட்டத்தை அமல்படுத்துவது முறையாகாது என்றார் ஷோபா ஓஜா.
    சர்ச்சைக்குரிய "தலாக்' விவகாரத்து முறை தொடர்பான கேள்விக்கு, அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய முடிவெடுக்கும் என்றார் அவர்.
    பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
    இதற்கு, அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியமும், இதர முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சட்ட அமைச்சகத்தின் முடிவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai