Enable Javscript for better performance
மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீது அதிக ஜிஎஸ்டி வரி: ஜேட்லி சூசகம்- Dinamani

சுடச்சுட

    

    மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீது அதிக ஜிஎஸ்டி வரி: ஜேட்லி சூசகம்

    By DIN  |   Published on : 15th October 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ARUNJAITLEY

    சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டத்தின் கீழ் (ஜிஎஸ்டி) மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீதான வரி விகிதங்கள் கூடுதலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்தார்.
    பாரீஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு சில நாள்களே ஆகும் நிலையில், அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக கோவா மாநிலம் அகுதாவில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பிற பொருள்கள் மீது விதிக்கப்படும் சாதாரண வரி விகிதங்களுடன், மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீதான வரிவிதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும். மத்திய அரசால் ஆலோசிக்கப்படும் திட்டங்களில், இதுவும் ஒன்றாகும். நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் மீது இதற்கு முன்பும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிற வளங்கள் மூலம் திரட்டப்படும் ஆதாரங்கள் அனைத்தும் பருவநிலை தொடர்பான திட்டங்களில் பயன்படுத்தப்படும். இதனால் நிலையான வளர்ச்சி இலக்குகளை நம்மால் உறுதியாக எட்ட முடியும் என்றார் ஜேட்லி.
    ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பேசியபோது, பருவநிலை மாற்ற பிரச்னைக்கு நிதி ஒதுக்குவது போன்ற குறிக்கோள்களில் பல நாடுகள் பாராமுகம் காட்டுவதற்கு கவலை தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது தொடர்பான திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு "பிரிக்ஸ்' அமைப்பிலுள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவுவதுஅவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai