Enable Javscript for better performance
விரைவில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை- Dinamani

சுடச்சுட

    

    முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.
    இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
    இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை வகுப்பது குறித்து மத்திய சமூக நீதி, மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அரசின் பிற துறை அமைச்சகங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளது.
    இதன் அடிப்படையில் ஏற்கெனவே உள்ள முதியோருக்கான தேசிய கொள்கை மாற்றி அமைக்கப்படுகிறது. வயதாகும்போது தேவையான அளவுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் போவதே இப்போது இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு புதிய கொள்கை வடிவமைக்கப்படுகிறது. மேலும், நமது சமுதாயம் முக்கியமாக இளைய தலைமுறையினர், முதியோர்கள் விஷயத்தில் எவ்வாறு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை வடிவமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai