

கத்தார் நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றம்சாட்டி, கத்தாருடன் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், யேமன், லிபியா ஆகிய 6 நாடுகள் கடந்த திங்கள்கிழமை அறிவித்தன.
இந்நிலையில் கத்தாரில் உள்ள தங்கள் உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுட்டுரையில் சுஷ்மாவுக்கு சிலர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "கத்தாரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் குறித்து மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அங்கு நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.