

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.
முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு பாஜக தவிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும் வாங்கவும் மத்திய அரசு கடந்த மே 23-ம் தேதி தடை விதித்தது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.