பஞ்சாபில் கடன் சுமை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தேரா மிர் மிரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லக்பிர் சிங். இவர் கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டார். விளைபொருளுக்கு போதிய விலை கிடைக்காததால், அவரால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் தனது நிலத்தில் உள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.