ஷியா, சன்னி வக்ஃபு வாரியங்களை கலைப்பதாக உ.பி. அரசு அறிவிப்பு

முறைகேடு புகார்களை அடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களின் வக்ஃபு வாரியங்களை கலைப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

முறைகேடு புகார்களை அடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களின் வக்ஃபு வாரியங்களை கலைப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் வக்ஃபு வாரியங்களைக் கலைப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருப்பதாக வக்ஃபு வாரியத் துறை அமைச்சர் மோசின் ரஜா புதன்கிழமை தெரிவித்தார்.
அனைத்து சட்ட வழிமுறைகளையும் பின்பற்றியே, அந்த வாரியங்களைக் கலைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் ஷியா, சன்னி பிரிவு வக்ஃபு வாரியங்களில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மத்திய வக்ஃபு கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து, அந்தக் கவுன்சில், உண்மை கண்டறியும் குழுவை நியமித்தது.
அந்தக் குழுவானது விசாரணை நடத்தி, மத்திய வக்ஃபு கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
அதில், முந்தைய சமாஜவாதி அரசில் வக்ஃபு வாரியத் துறை அமைச்சராக இருந்த ஆஸம் கான், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வக்ஃபு வாரிய சொத்துகளை அபகரித்தார் என்று குறிப்பிட்டிருந்தது.
கல்வி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, வக்ஃபு வாரிய சொத்துகளை, அந்த அறக்கட்டளைக்கு ஆஸம் கான் மாற்றினார் என்று அந்தக் குழு தெரிவித்தது. மேலும், வக்ஃபு வாரிய சொத்துகளின் வாடகை வசூல் பதிவேடுகளைப் பாரமரிப்பதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஷியா, சன்னி வக்ஃபு வாரியங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, மத்திய வக்ஃபு கவுன்சில் அளித்த 2 அறிக்கைகளையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அமைச்சர் மோசின் ரஜா அனுப்பி வைத்தார். அதனடிப்படையில், மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com