

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் 64-ஆவது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் தனது 64-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார்.
இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'வீபோ' என்னும் சமூக வலைதளத்தில் மோடி சீன மொழியில் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
ஜீ ஜின்பிங்கின் பிறந்த நாளையொட்டி, அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். கஜகஸ்தான் தலைநகர் ஆஸ்தானாவில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது, இந்திய - சீன உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தோம் என்று அந்தச் செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.