

ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்த அமைதி மிகவும் அவசியம்; அமைதியை ஏற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களை ஸ்ரீநகரில் வியாழக்கிழமை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது கூறியதாவது:
மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அமைதி மிகவும் அவசியம். பணத்தை பெற்றுக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களிடையே ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக உள்ளது.
அடிக்கடி வன்முறை நிகழ்வதால் அûனைவரையுமே வன்முறையாளர்களாகக் கருத முடியாது. வன்முறை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குபவர்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்
கொண்டு வருகின்றன. இப்போது நிலைமை மேம்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளதன் மூலம் இந்தியாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்றார் மெஹபூபா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.