ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு வியாழக்கிழமை விருந்தளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சுரேஷ் பிரபு, மத்திய இணையமைச்சர்கள் ஒய்.எஸ். செளதரி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்தும், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் விருந்தின்போது தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
எனினும், அனைவரும் எதிர்பார்த்தபடி அமித் ஷா - சந்திரபாபு நாயுடு இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்பது குறித்த தகவல் இல்லை.
முன்னதாக, விஜயவாடா விமான நிலையத்தில் 13 அதிநவீன மருத்துவ அவசரக்கால ஊர்திகளை அமித் ஷாவும், சந்திரபாபு நாயுடுவும் மக்களுக்கு அர்ப்பணித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.