சுடச்சுட

  

  "அவை நடவடிக்கைகளில் நியமன எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்'

  By DIN  |   Published on : 01st April 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியமன எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  மாநிலங்களவையில் சமாஜவாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் வியாழக்கிழமை பேசியபோது, நியமன எம்.பி.க்களான கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ஹிந்தி நடிகை ரேகா உள்ளிட்டோர் மாநிலங்களவைக்கு தொடர்ந்து வராததை சுட்டிக்காட்டி ஒழுங்குப் பிரச்னையை எழுப்பினார்.
  இந்நிலையில், இதுகுறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  நாடாளுமன்றம் என்பது மக்கள் நலன் குறித்து விவாதிப்பதற்கான மிக உயரிய அமைப்பு. நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அதன் சேவகர்கள். அவர்களில் பிரபலமானவர்கள், பிரபலம் அல்லாதவர்கள் என்ற பிரிவுகள் கிடையாது. ஒவ்வோர் உறுப்பினரும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்று, தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார் அவர்.
  இதேபோல், பாஜக எம்.பி. ஹேமமாலினியும், அனந்த் குமாரின் கருத்தை ஆதரித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்தப் பதவிக்கு உரிய பணிகளை முழுமையாகவும், முறையாகவும் ஆற்ற வேண்டும். அரை மனதோடு, விருப்பமின்றி செயல்படக் கூடாது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai