சுடச்சுட

  

  கல்வி, பொருளாதாரம், அரசியல் தர வரிசையில் இந்தியா முன்னேற்றம்

  By DIN  |   Published on : 01st April 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகளவில் கல்வி, பொருளாதாரம், அரசியல் தர வரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
  இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கிருஷ்ண ராஜ் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ பதில் விவரம்:
  உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட "உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2016'-இல் உலகின் 144 நாடுகளில் இந்தியாவுக்கு 87-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 2015-இல் 108-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2016-இல் 87-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கல்வியில் நிகழ்ந்த முக்கிய மேம்பாடுகள் காரணமாக தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வித் துறையில் 2015-இல் 125-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2016-இல் 113-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வாய்ப்பில் இந்தியா உலகளவில் 139-ஆவது இடத்தில் இருந்து 136-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  சுகாதாரம், உயிர் வாழ்தலில் 142-ஆவது இடத்திலும், அரசியல் அதிகாரமளித்தலில் 9-ஆவது இடத்திலும் இந்திய உள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். மகளிருக்கு அதிகாரம் கிடைக்கவும், பாலின இடைவெளி, சமத்துவமின்மையை அகற்றவும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார் கிருஷ்ணராஜ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai