சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரிவினைவாதிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில பகுதிகளில் வன்முறை வெடித்தது.
  பிரிவினைவாதத் தலைவர்கள் சிலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இதுகுறித்து ஸ்ரீநகரில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  பாராமுல்லா, ஸ்ரீநகர், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்தனர்.
  கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை விரட்டினோம்.
  இந்த நடவடிக்கையில் யாரும் காயமடையவில்லை.
  ஸ்ரீநகரில் அமைந்துள்ள மசூதி உள்பட சில பகுதிகளில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
  போலீஸார் நடத்திய தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதி வாசிகள் சிலர் தெரிவித்தனர்.
  பட்காம் மாவட்டம், சதூரா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிவாசிகள் சிலர் அவர்கள் மீது கற்களை வீசி எறிந்து இடையூறு ஏற்படுத்தினர்.
  அப்போது, பாதுகாப்புப் படை வீரர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்களைக் கலைத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்து 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
  இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai