சுடச்சுட

  

  கேரள போக்குவரத்துத் துறையின் புதிய அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டி சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
  பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்துவந்த ஏ.கே.சசீந்திரன் அப்பதவியை ராஜிநாமா செய்தார். அவரும் அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.
  போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவிக்கு தாமஸ் சாண்டியின் பெயரை அந்த மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் உழவூர் விஜயன், முதல்வர் பினராயி விஜயனிடம் பரிந்துரைத்தார்.
  அதைத் தொடர்ந்து, இடது ஜனநாயக முன்னணியின் முக்கியத் தலைவர்கள் கலந்தாலோசித்து அவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக தேர்வு செய்தனர். முறைப்படி அவர் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்.
  முன்னதாக, உதவி கேட்ட பெண்ணிடம் சசீந்திரன் ஆபாசமாக பேசியதாக ஒலிநாடா ஒன்று பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. இதையடுத்து, அவர் தனது பதவியை கடந்த 26-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai