சுடச்சுட

  

  டாஸ்மாக் கடை நடத்தப் பிறப்பித்த உத்தரவு தளர்வு: உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 01st April 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் மதுபானக் கடைகள் அமைக்க கட்டுப்பாடுகள் விதித்து கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் சில தளர்வை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை செய்தது.
  இதன்படி மாநில, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்து மதுபானக் கடைகள் வைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிர்ணயித்த 500 மீட்டர் சுற்று வட்டார வரம்பு 220 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
  தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்குக் குறையாமல் மதுபானக் கடைகளை தள்ளி அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 15-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
  இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை கடந்த புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
  20 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறம் அருகே உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் மதுபானக் கடைகள் இருக்க வேண்டும் என்ற வரம்பை 220 மீட்டர் சுற்றுவாட்டாரமாகக் குறைக்கிறோம்.
  தமிழகத்தில் மதுபானக் கடைகளை மாநில அரசே நடத்துவதால் இந்த உத்தரவை அமல்படுத்துவதில் பாதிப்பு இருக்காது என நீதிமன்றம் கருதுகிறது. எனவே, உத்தரவை அமல்படுத்த தமிழகத்துக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது. ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தற்போது மதுபானக் கடைகள் செயல்பட அளிக்கப்பட்டுள்ள உரிமம் முறையே வரும் ஜூன் 30, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் நிறைவு பெறுகிறது. அதற்கு மேல் இரு மாநிலங்களிலும் மதுபானக் கடைகளுக்கு உரிமத்தை நீட்டிக்கக் கூடாது.
  இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்பு, மதுபானக் கடைகளுக்கு மட்டும் பொருந்தும் என்பது போல பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தீர்ப்பு மதுபானக் கடைகள் மட்டுமின்றி, இனி கட்டுப்பாடு வரம்புக்கு உள்பட்ட 220 மீட்டர் சுற்று வட்டாரத்தில் செயல்படும் மதுபானக் கூடங்கள் (பார்கள்), மதுபான விடுதிகள் (பப்புகள்), மதுபானத்துடன் கூடிய உணவகங்கள் (ரெஸ்ட்ரோ பார்) ஆகிவற்றுக்கும் பொருந்தும். இந்த மதுக்கடைகள் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் பொது இடங்களில் இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai