சுடச்சுட

  

  தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆதரவு

  By  புதுதில்லி,  |   Published on : 01st April 2017 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mks

  தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

  தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, பயிர் காப்பீட்டுக் கடன் தள்ளுபடி, உடனடியாக நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 19ஆவது நாளை எட்டியுள்ளது.

  இந்நிலையில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது அவர் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai