சுடச்சுட

  

  "நீட்' தேர்வுக்கு வயது வரம்பை நீக்கியது உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 01st April 2017 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) நிகழாண்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 1-ஆம் தேதி நிறைவடைந்துவிட்ட நிலையில், மேற்கண்ட கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
  முன்னதாக, 25 வயதுக்கு உள்பட்டவர்களே "நீட்' தேர்வில் பங்கேற்க முடியும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் விவரம் வருமாறு:
  இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், ஒரு அறிக்கை மூலம் நீட் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையில், நீட் தேர்வுக்கான வயது வரம்பை நிர்ணயிக்க முடியாது என்றே நாங்கள் கருதுகிறோம்.
  எனவே, நிகழாண்டுக்கான தேர்வில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்பட வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள், சிபிஎஸ்இ-யின் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாட்டை, சிபிஎஸ்இ மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai