சுடச்சுட

  
  paneerselvam

  பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  அந்த அணிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் ஒப்பிட்டு வாக்காளர்களை குழப்பி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி அளித்த புகாரின் பேரில் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளது.
  அதில், "இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் விளக்கமளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
  அதிமுகவின் இரு பிரிவினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரியதால் அச்சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் முடக்கிய தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இரு அணிகளுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai