சுடச்சுட

  

  பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு காஷ்மீர் இளைஞர்கள் இரையாக வேண்டாம்: ராஜ்நாத் சிங்

  By DIN  |   Published on : 01st April 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAJNATH2

  சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் மேற்கொள்ளும் தூண்டிவிடும் முயற்சிகளுக்கு இரையாக வேண்டாம் என்று காஷ்மீர் இளைஞர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
  மக்களவை வெள்ளிக்கிழமை கூடியதும், காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் அண்மையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்த விவகாரத்தை காங்கிரûஸச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் உள்பட சில எம்.பி.க்கள் எழுப்பினர்.
  அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் பேசுகையில், "காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் தலையிட வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
  போராட்டங்களாலும், மோதல்களாலும் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மிக அண்மைக்காலமாக ஒரு புதிய போக்கு காணப்படுகிறது. அதாவது, அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெறும்போது அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு குவிந்து விடுகின்றனர். அவர்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் தப்பியோட உதவி செய்யும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குகின்றனர்.
  மோதல்கள் நடைபெறும் பகுதிக்கு இளைஞர்களைக் குவிப்பதற்கு பாகிஸ்தான் தரப்பில் முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸப்) போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் தவறான வழிகாட்டுதல்களுக்கு இரையாக வேண்டாம் என்று காஷ்மீர் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
  பயங்கரவாதிகளை எந்த வழியில் கையாள வேண்டுமோ அந்த வழியில் பாதுகாப்புப் படையினர் கையாண்டு வருகின்றனர் என்றார் ராஜ்நாத் சிங்.
  "கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை': இதனிடையே, மாநிலங்களவையில் உடனடிக்கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. சம்பு பிரசாத்ஜி பேசியதாவது: காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதியுடன் பாதுகாப்புப் படையினர் மோதலில் ஈடுபட்டபோது அங்கு திரண்ட கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது. இதனால் பயங்கரவாதியுடன் மட்டுமின்றி, அவர் தப்பிச் செல்ல உதவுவதற்காக கல்வீச்சில் ஈடுபட்டோருடனும் பாதுகாப்புப் படையினர் போராட வேண்டிவந்தது.
  இந்தக் கல்வீச்சில் பாதுகாப்புப் படை வீரர்கள் 60 பேர் வரை காயமடைந்தனர். அப்போது பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் (துப்பாக்கிச்சூடு) கல்வீச்சில் ஈடுபட்ட 3 பேர் உயிரிழந்தழனர்.
  காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபடுவதன் மூலம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறுக்கிட முயற்சி மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai