சுடச்சுட

  
  nitish_kumar

  பிகாரில் மின் கட்டணங்களுக்கான மானியம், மின்விநியோக நிறுவனங்களுக்கு பதிலாக இனிமேல் நுகர்வோருக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
  பிகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் மின்சார கட்டணங்கள் சுமார் 55 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. சனிக்கிழமை (ஏப்.1) முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது:
  மின் கட்டணங்களுக்கான மானியத்தை, மின்விநியோக நிறுவனங்களுக்கு பதிலாக நேரடியாக நுகர்வோருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், மின் கட்டணங்களுக்கு அரசு எந்த அளவுக்கு மானியம் வழங்குகிறது என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
  இதுபோன்ற நடைமுறையை செயல்படுத்தும் முதல் மாநிலம் பிகார்தான். இது வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பிகார் இருக்கும்.
  உ.பி., மேற்கு வங்கத்தைவிட குறைவு: மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு 50 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.08-ஆக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3.58 மானியமாக வழங்கப்படும். எனவே, இறுதிக் கட்டணம் ரூ.2.50தான். உத்தரப்பிரதேசம் (ரூ.3.17), மேற்கு வங்கம் (ரூ.3.44) ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்தக் கட்டணம் குறைவுதான்.
  இதேபோல, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.45-ஆகவும், நகர்ப்புறங்களில் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.48-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முறையே ரூ.3.10, ரூ.1.48 மானியமாக வழங்கப்படும் என்றார் நிதீஷ் குமார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai