சுடச்சுட

  

  காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.

  காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் செனானி-நஷ்ரி இடையே மலையை குடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் காற்றோட்டம், தீ தடுப்பு, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

  இந்நிலையில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.  இதற்காக அவர் நாளை காஷ்மீர் செல்கிறார். தொடர்ந்து அன்றையதினம் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இதனிடையே காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹூரியத் அமைப்பு நாளை முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai