சுடச்சுட

  

  பிரதமர் மோடி நாளை காஷ்மீர் வருகை: பல அடுக்கு பாதுகாப்பு தயார்

  By DIN  |   Published on : 01st April 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்திலுள்ள சேனானி நகரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீண்ட சாலை வழி சுரங்கப் பாதையை ஏப்ரல் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார். இதை முன்னிட்டு, அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், துணை ராணுவப் பிரிவு அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அப்போது எஸ்.பி.வைத் பேசியதாவது: எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்; விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ள இடத்தில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம்.
  அதேசமயம் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் உண்டாகாத வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai