சுடச்சுட

  

  புதிய நோட்டுகள் அச்சடிப்பு: ரூ.1,000 கோடி செலவு குறைய வாய்ப்பு

  By DIN  |   Published on : 01st April 2017 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய ரூபாய் நோட்டுகளை குறைவாக புழக்கத்தில் விடத் திட்டமிட்டிருப்பதால், அவற்றை அச்சடிக்கும் செலவு வழக்கத்தைக் காட்டிலும் ரூ.1,000 கோடி வரை குறைவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  வாபஸ் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தொடர்பாக சில முக்கிய முடிவுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்தன.
  அதாவது, ரூ.15.55 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்குப் பதிலாக, அவற்றை விட குறிப்பிட்ட விகிதம் குறைவாக விடுவதாக முடிவு செய்யப்பட்டது.
  ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கிலும், மின்னணு மற்றும் இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், படிப்படியாக புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திட்டமிட்ட கணக்கின்படி, இன்னும் ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகளை மட்டும் அச்சிட்டால் போதுமானது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்த நோட்டுகள் ஏப்ரல் பாதிக்குள் அச்சடிக்கப்பட்டு விடும் என்றும், அவை விரைவில் புழக்கத்துக்குக் கொண்டுவரப்படும் என்றும்
  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளின் மதிப்பில் இருந்து ரூ.1.17 லட்சம் கோடி குறைவாக அச்சடிக்கத் திட்டமிட்டிருப்பதால், மொத்த செலவினத்தில் ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,000 கோடி வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai