சுடச்சுட

    

    புறா பந்தயம்: சேலத்தைச் சேர்ந்த புறா 26 மணி நேரத்தில் கடந்து புதிய சாதனை

    By DIN  |   Published on : 01st April 2017 02:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pn

    ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கும் புறா பந்தய போட்டியில் சேலத்தைச் சேர்ந்த புறா 26 மணி நேரத்தில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    சேலம் புறா சங்கம் சார்பில் ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கும் புறா பந்தயம், மகாராஷ்ட்ர மாநிலம் வர்தா என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

    இந்த பந்தயத்தில் தமிழகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஓசூர் பகுதிகளைச் சேர்ந்த 62 புறாக்கள் கலந்துகொண்டன.

    இதில், சேலத்தைச் சேர்ந்த பிரதீப் அகிலன் என்பவர் வளர்த்து வரும் புறா, கடந்த 20-ஆம் தேதி புறப்பட்டு, பந்தய தூரமான ஆயிரம் கிலோமீட்டரை கடந்து 23-ஆம் தேதி காலை சேலம் வந்தடைந்தது. இதன்மூலம் சுமார் 26 மணி நேரத்தில் கடந்து இந்த புறா முதலிடம் பிடித்தது.

    கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை சேலம் புறா முறியடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai